search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் ஹப்"

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் டிஜிட்டல் ஹப் என்ற பெயரில் பிரத்யேக விற்பனை மையத்தை துவங்கியுள்ளது. #Zebronics


    தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் பாகங்கள் மற்றும் கண்காணிப்புப் பொருட்களை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி பிராண்டாக அறியப்படும் ஜெப்ரானிக்ஸ், சில்லறை விற்பனையை அதிகரிக்கும் விதமாக “ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்” என்ற பெயரில் பிரத்தியேக விற்பனை மையத்தை சேலத்தில் திறந்துள்ளது.

    "எப்போதும் முன்னோடி" என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில், ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப் எப்போதும் முன்னோடியாகவே திகழ்கிறது. ARRS மல்ட்டிபிளெக்ஸ் அருகில் இருக்கும் இந்த பிரத்தியேகக் கடை, பயனர்கள் பொருட்களை வாங்குவதற்கு முன் அதைத் தொட்டுப்பார்த்து, உணர்ந்து அதனை அனுபவிக்க அனுமதிக்கிறது. 

    இந்த கடையானது தொழில்நுட்ப மையம் மற்றும் அம்சங்களில் IT சாதனங்கள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் பாகங்கள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்காணிப்புப் பொருட்களின் பரந்த வரம்பிற்காக விற்பனை மையம் பிரம்மான்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் ஜெப்ரானிக்ஸ் உத்தரவாதமும், இந்தியா முழுவதும் 128 சேவை மையத்திற்கான விபரங்களையும் கொண்டிருக்கும்.



    சில்லறை விற்பனை உத்தி அணுகுமுறையானது, பன்முக பார்வையாளர்களைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளுடன் தொழில்நுட்பத்தின் இடைவெளியை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. பெரிய வரவேற்பைக் கொண்ட தயாரிப்புகளை பலருக்கு வழங்குவது முதல், முக்கியச் சந்தையில் ப்ரீமியம் தயாரிப்புகளைத் தொடங்குவதற்கு, தனது தடத்தைப் பதித்திடுவது என மாற்றத்தை இந்த பிராண்டு அடைந்து வருகிறது.

    ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி - தங்கள் பிரத்யேக விற்பனை மையத்தின் விழாவில் பேசுகையில் “தமிழ்நாடு ஜெப்ரானிக்ஸ் இன் சொந்த மண் ஆகும், எனவே சேலத்தில் எங்கள் முதல் ஸ்டோர் ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்பைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

    சிறப்பான வடிவமைப்பு, செயல்திறன் மிக்க சாதனங்களை குறைவான விலையில் வழங்கும் பிராண்ட் ஆக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. எங்கள் பிராண்டானது இந்தியா முழுவதிலும் இருந்தாலும், நல்ல பேரம் மற்றும் தரமான தயாரிப்பை நேசிக்கும் பார்வையாளர்களுக்காக நடுத்தர நகரங்களில் எங்களது கடைகள் இருப்பதே எங்களது உண்மையான வலிமை" என்றார். 

    மற்ற நகரங்களிலிலும் அதிகமான கடைகளைத் திறக்க இருக்கிறோம் என்றும் திரு. தோஷி தெரிவித்தார்.
    ×